அறிக்­கையில் 103 பக்­கங்கள் மாயமாம்!!

பாரா­ளு­மன்­றத்தில் இன்­றைய தினம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் 103 பக்­கங்கள் அகற்­றப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான ஜி.எல் பீரிஸ் தெரி­வித்தார்.


அத்­துடன் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிப்­ப­தற்கும் முன்னர் திரு­டர்­களின் கைக­ளுக்கு ஒப்­ப­டைத்­துள்­ளனர். அவ்­வா­றாயின் எப்­படி நீதி­யான விசா­ர­ணையை எதிர்­பார்க்க முடியும். மேலும் இந்த விசா­ரணை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் குற்­ற­வியல் பிரி­விற்கு வழங்­கப்­ப­டாமல் சிவில் வழக்கு பிரி­விற்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யாயின் மத்­திய வங்கி மோசடி குற்­ற­வா­ளிகள் கைது செய்­யப்­ப­ட­மாட்­டார்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

இலங்கை மத்­திய வங்­கியில் பாரி­ய­ளவில் மோசடி நடந்­துள்­ளது. இதன்­பி­ர­காரம் இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 

இந்­நி­லையில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் இந்த மோச­டியின் பிர­தான குற்­ற­வா­ளி­க­ளான மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்­திரன், முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மற்றும் பெபச்­சுவல் ட்ரசரிஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோ­சியஸ் ஆகி­யோ­ருக்கு அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இது எந்த வகையில் நியா­ய­மாகும்? இந்த அர­சாங்கம் யாரை காப்­பாற்ற முயற்­சிக்­கின்­றது? இவ்­வாறு அறிக்­கையை திரு­டர்­களின் கைகளில் ஒப்­ப­டைக்கும் போது எப்­படி நீதியை எதிர்­பார்ப்­பது? அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் இன்­றைய தினம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள அறிக்­கையில் 103 பக்­கங்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. மேலும் சில இணை ஆவ­ணங்­களும் இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ளன. இது எமக்கு பாரிய சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திரு­டர்­களை பாது­காக்க முனை­கின்றார் போல் தெரி­கின்­றது.

மேலும் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விசா­ரணை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் குற்­ற­வியல் பிரி­விற்கு வழங்­கப்­ப­டாமல் சிவில் வழக்கு பிரி­விற்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யாயின் மத்­திய வங்கி மோசடி குற்­ற­வா­ளிகள் கைது செய்­யப்­ப­ட­மாட்­டார்கள். அதற்கு மாறாக சிவில் வழக்கின் பிரகாரம் மோசடி செய்யப்பட்ட நிதியையே அறிவிட திட்டமிட்டுள்ளனர். இது நியாயமற்ற செயற்படாகும். ஜனாதிபதி ஆக்ரோஷமாக கூறிய வாள் எங்கே?. திருடர்களை கைது செய்யாமல் விடுவதானது சம்பிரதாயபூர்வமான செயற்பாடுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்.

No comments

Powered by Blogger.