தபால்மூல வாக்களிப்பு அட்டைகள் 11 ஆம் திகதி முதல் விநியோகம்உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான அட்டைகள் எதிர்வரும் 11ம் திகதி கையளிக்கப்படவுள்ளன.

இது தொடர்பான ஆவணப் பரிசோதனைகள் தற்போது மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 25ம் 26ம் திகதிகளில் இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுவதால் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக தேர்தல் செயலக அலுவகத்திலும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.