நேற்று மாத்திரம் தேர்தல் சட்டத்தை மீறிய 11 பேர் கைது!!

நேற்று மாத்திரம் தேர்தல் சட்டத்தை மீறிய 11 பேர் கைது
நேற்றையதினத்தில் மாத்திரம் தேர்தல் சட்டத்தை மீறிய 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சட்டவிரோதமான முறையில் போஸ்டர் ஒட்டுதல், போஸ்டரைக் கொண்டு செல்லல் மற்றும் அதனை வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. 

மேலும், சந்தேகநபர்கள் கிளிநொச்சி, தொடங்கொடை, பாதுக்கை, ரம்புக்கனை மற்றும் அக்மீமன ஆகிய பகுதிகளிலேயே கைதாகியுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. 

இதேவேளை, நேற்று மாத்திரம் 13 முறைப்பாடுகள் தேர்தல் சட்டமீறல் குறித்து கிடைக்கப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.