2 கோடி வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் நிரூபிக்க முடியுமா? - சிறிதரன் சவால்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபா பணம் வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சவால் விடுத்துள்ளார். 
2 கோடி வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் நிரூபிக்க முடியுமா? - சிறிதரன் சவால்
நேற்று கிளிநொச்சி - வட்டக்கச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

வவுனியாவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈபிஆர்எல்எப் எந்த வட்டாரத்திலும் வெல்லமாட்டார்கள். இந்த இடத்தில் நீங்கள் அதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 

எமது தமிழ் மக்களை ஈபிஆர்எல்எப் கொலை செய்தமையினையும், கொன்று குவித்தமையையும் மக்கள் மறந்து விடமாட்டார்கள். 

அத்தோடு, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்டது சிவசக்தி ஆனந்தன் தான், எனவும் சிறிதரன் குற்றம்சாட்டினார். 

மேலும், நாங்கள் இந்த தேர்தலில் இடைக்கால அறிக்கைக்கு ஆணை வழங்குகள் என்று மக்களிடம் கோரவில்லை. இது அதற்கான தேர்தலும் அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்காவது இடைக்கால அறிக்கைக்கு ஆணை கோரி இந்த தேர்தலில் வாக்களியுங்கள் என்று வேண்டுகின்றனரா? அதனை உறுதிப்படுத்த முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.