மைத்திரி 2021ஆம் ஆண்டு வரை பதவியில் இருக்க முயற்சி!


தற்போதைய ஜனாதிபதி எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரை பதவியில் இருக்க முடியுமா என உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தின் 19ஆவது திருத்த சட்டத்தை கொண்டு வந்து ஜனாதிபதி பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளாக குறைத்துக்கொண்டார்.

19ஆவது திருத்த சட்டத்திற்காக அன்று நாடாளுமன்றத்தில் 224 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.

இதன்போது, ஆறு ஆண்டுகள் என்ற ஜனாதிபதி பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாக குறைத்து பொலன்னறுவையில் இருந்து ஆட்சி செய்ய போவதாக கூறினார்.

ஆனால், தற்போது மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தை அதிகரிக்க முடியுமா என உயர்நீதிமன்றத்திடம் வினவியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி 2020ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.