பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிப்பது தொடர்பான பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் பிரதமர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டதனை அடிப்படையாகக் கொண்டும் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை முன்வைக்கப்பட உள்ளது என உதய கம்மன்பில கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.