பன்முர் தோட்டத்தில் சிறுத்தை தாக்கி 5 பேர் காயம்

பன்முர் தோட்டத்தில் சிறுத்தை தாக்கி 5 பேர் காயம்அட்டன் பன்முா் தோட்டத்தில் சம்பவம்.

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் பன்முா் தோட்டபகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளா்கள் மீது சிறுத்தை புலி தாக்கியதில் ஐந்து தொழிலாளா்கள் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்திசாலையின் அனுமதிக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் 02.01.2018.செவ்வாய் கிழமை பிற்பகல் 12.20 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது இந்த சம்பவத்தின் போது நான்கு ஆண் தொழிலாளா்களும் ஒரு பெண் தொழிலாளியும் இவ்வாறு சிறுத்தை தாக்குலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தனா்.

தேயிலை மலையில் பதுங்கியுருந்த சிறுத்தை புலியை ஆண் ஒருவா் தாக்க முற்பட்டபோதே சிறுத்தை புலி மீண்டும் தொழிலாளா்களை தாக்கியதாக பொலிஸாாின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது இதே வேளை தோட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி சிறுத்தை புலியை மடக்கிபிடித்து வனவிலங்கு காாியாலயத்திற்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை அட்டன் பொலிஸாா் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.