மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் மீனவர் ஒருவருடைய மீன் வாடி எரிந்து 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி உபகரணங்கள் தீயில் எரிந்து நாசம்-(photo)

மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருடைய மீன் வாடி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) இரவு திடீர் என ஏற்பட்ட தீயின் காரணமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதாக அதன் உரிமையாளர் இன்று திங்கட்கிழமை(22) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த சுமந்தன் என்ற மீனவரது வாடியே எரிந்து சாம்பலாகியுள்ளது.

-இதன் போது மீன் பிடி படகின் வெளி இணைப்பு இயந்தியம்,மீன் பிடி வலைகள் உற்பட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி உபகரணங்கள் இவ்வாறு எரிந்து சாம்பலாகியுள்ளதாக குறித்த மீன் வாடியின் உரிமையாளர் கவலை தெரிவித்தார்.

-குறித்த மீன் வாடியில் தீ ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் எவையும் இல்லாத நிலையில் குறித்த வாடியை இனம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரியூட்டியிறுக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

-இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த தீப்பரவல் திட்டமிட்ட சதியா? இல்லையா என்பது தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.