நீதிபதியின் வாகனத்தில் மோதுண்டு இளம் தாய் பலி!!

அனுராதபுரம் - வாரியபொல பிரதான வீதியின் மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தாய் உயிரிழந்துள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குருணாகல் பிரதேசத்தின் முன்னாள் நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி ஜயபிரேம பீ. தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த முன்னாள் நீதிபதி செலுத்திய வாகனத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 35 வயதுடைய தாய் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

அவரது 12 வயது மகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.