இந்தியத் துணைத்தூதுவர் நடராஜனின் பிரியாவிடை நிகழ்வு!!

இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு இன்று மதியம் 12 மணியளவில் பிள்ளையார் விடுதியில் நடைபெற்றது. 

கடந்த நான்கு வருடங்களாக யாழ் மண்ணிலிருந்து சேவையாற்றிய அவர் எதிர்வரும் பங்குனி மாதம் முதல் சேவைக் காலத்தை நிறைவு செய்து தாய் நாடு திரும்ப காத்திருக்கும் நிலையில் அவர்களது நண்பர்களினால் இந்த விருந்து உபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கலாநிதி சிதம்பர மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கலந்து கொண்டார். 

சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ரத்தினம் விக்னேஸ்வரன், பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கம், கலாநிதி சந்திரபண்டார, பேராசிரியர் கா. குகபாலன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக எல். இளங்கோவன் ஆளுநரின் செயலாளர், சங்கானை கோட்டக்கல்வி பணிப்பாளர் ராசலிங்கம் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.