ஓந்தாட்சிமடம் கடலில் மூழ்கி இளைஞன் பலி! பொங்கலன்று துயரம்!!

                                                                                           - செ.துஜியந்தன் -
நேற்று பொங்கலன்று தனது மாமியின் குடும்பத்தோடும் நண்பர்களோடும் மட்டக்களப்பு ஓந்தாட்சிமடம் கடற்கரைக்கு சென்ற இளைஞன் ஒருவன் கடலில் நீராடியபோது பரிதாபகரமான நீரில் மூழ்கிபலியாகியுள்ளார். இச்சம்பவம் பொங்கலன்று பி.ப.4மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கடலில் மூழ்கியவர் எருவில் பாரதிபுரம் பாரதிவீதியைச்சேர்ந்த எஸ்.விஜிகரன்(வயது18) என்ற இளைஞனாவான். இவருடன் மூன்று பேர் கடலில் நீராடியபோது எதிர்பாராதவிதமான கடற் சூழியினால் இழுத்துச்செல்லப்பட்டு கடலில் மூழ்கியுள்ளார். கடலில் காணாமல்போன இவ் இளைஞனின் சடலம் இன்னும் கரை ஒதுங்கவில்லை. இவரைத்தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

பொங்கலன்று இடம்பெற்ற இத் துயரச்சம்பவம் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.