பாண்டிருப்பில் பொங்கல் சிறப்புக் கவியரங்கம்!!

                                                                                            - செ.துஜியந்தன் -
பாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பொங்கல் தரணியெல்லாம் ஓங்கட்டும் எனும் தலைப்பில் பொங்கல் சிறப்புக் கவியரங்கம் ஈழத்தின் பூகழ் பூத்த கிழக்கின் மூத்த கவிஞர் மு.சடாட்சரன் தலைமையில் பாண்டிருப்பு நெசவு நிலையக் கட்டிடத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கவிஞர்களான சபாசபேஷன், கன்னிமுத்துவெல்லபதியான், மீராசுந்தர், ஆனந்தத்தில் ஒரு அனல், கவிதாயினி ஜெனித்தாமோகன், தேவலோஜன், புவிலக்ஸி, மோகனதாஸ், கிருபைராஜா, அகரம் துஜியந்தன் ஆகியோர் கவிபாடினார்கள்.

இங்கு மூத்தகவிஞர் மு.சடாட்சரன், ஒய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம் ஆகியோர் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இதில் கல்முனைப் பிரதேச கலை இலக்கியவாதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். No comments

Powered by Blogger.