மண்டூர்-வீரமுனை பிரதான வீதியில் விபத்து! ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழப்பு!!

                                                                                   -க.விஜயரெத்தினம் -
மண்டூர்-வீரமுனை பிரதான வீதியில் உள்ள வேப்பையடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மதுவரி உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்டூர்-வீரமுனை பிரதான வீதியில் வேப்பையடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக என்னும் இடத்தில் இன்று(11.1.2018) காலை 7.25 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் செங்கலடியைச் சேர்ந்த ஆறுமாதக் குழந்தையின் தந்தையான கிருஸ்ணபிள்ளை வாசன் (வயது33) என்பவர் பஸ்ஸுடன் மோதுண்டு சம்பவ இடத்திலே பலியானார்.

இவர் கொத்தியாபுல எனும் இடத்திலிருந்து கொக்கட்டிச்சோலை வழியாக ஊடறுத்து வெல்லாவெளி பிரதேசத்துக்கு வந்தடைந்து மண்டூர் வழியாக கல்முனைக்கு கடமைக்கு சென்றிருந்தார்.இவ்வாறு பயணிக்கையிலே எதிரே வந்த பஸ்ஸுடன் வேகமாக மோதியதிலே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.தலைக்கவசம் அணிந்திருந்த இவர் பஸ்ஸூடன் மோதியதால் தலைக்கவசம் உடைந்து சிதறியுள்ளதுதாலே அதிக இரத்தம் போனதாலே அவ்விடத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவர் கல்முனை மதுவரி திணைக்களத்தில் மதுவரி பரிசோதகராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்து சம்பந்தமாக துரித விசாரணையை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றன்றார்கள்.No comments

Powered by Blogger.