கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம் தீப்பற்றியது!!

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் யாழ். நோக்கி புறப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதத்திலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. 

இன்று நண்பகல் 12.30 மணியளவில் சாவகச்சேரி, மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக புகையிரதம் சென்று கொண்டிருந்த போது புகையிரதத்தின் இயந்திர பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக புகையிரதம் சடுதியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், பேருந்துகளில் தமது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் 

விபத்து குறித்து யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து புகையிரதம் யாழ். புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளது. 

இயந்திர கோளாறு காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.