எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தலையிடத் தயார்!


மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று கொழும்பு புறக்கோட்டை நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளை ஆராய அங்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

நடைபாதை வியாபாரிகள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து அமைச்சர் இதன் போது கவனம் செலுத்தியுள்ளார்.

நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க தான் எப்போது தலையிட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் அவர்களுக்காக குரல் கொடுக்கப் போவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நடைபாதை வியாபாரிகளை அங்கிருந்து அகற்றுவது உட்பட அவர்களுக்கு எதிரான எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் தலையிட தயாராக இருப்பதாகவும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.