முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம்?


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் பிரதான அமைச்சுப் பதவிகள் மூன்றின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.

சில அமைச்சர்கள் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு முரணான வகையில் தொடர்ச்சியாகவே செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமை நீடிப்பதனை தவிர்க்கும் நோக்கில் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கையின் மூலமும் சில அமைச்சுக்களின் செயற்பாடுகள் குறித்து திருப்தி கொள்ள முடியாத நிலைமை உள்ளது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பு வார இறுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.