கிழக்கு வாழ் தமிழ்  மக்களின் இருப்பை பாதுகாக்க கிழக்கு தமிழர் ஒன்றியம் ஆரம்பம்!!

                                                                                            - செ.துஜியந்தன் -
கிழக்கு மாகாண தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கவும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கட்சி அரசியில் பேதங்களுக்கப்பால் புத்திஜீவிகளினால் கிழக்கு தமிழர் ஒன்றியம் எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவஞானம் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் இன்று 2018-01-06 சனிக்கிழமை நடைபெற்றது. இங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த கல்விமான்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். இங்கு கூடிய புத்திஜீவிகள் கிழக்கு மாகாண தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்வரும் தேர்தல்களில் ஒரு பொது சின்னத்தில் போட்டியிட வேண்டும். அதற்கு மக்களை தயார்படுத்தவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இவ் பொது அமைப்பிற்கு கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியம் என்ற பேரும் வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண தமிழ் மக்களை சமூக, பொருளாதாரரீதியில் வளம் மிக்கதொரு சமூகமாக கட்டியெழுப்புவதுடன் அரசியல் ரீதியில் விழிப்படைந்தவர்களாக மக்களை மாற்றி வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதும், இன விகிதாசாரத்தை கூட்டுவது உட்பட பல்வேறு கருத்துக்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது. குறிப்பாக எதிர்வரும் தேர்தல்களில் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாக்குகள் சிதறாமல் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து ஓரே குடையின் கீழ் ஒரு பொது சின்னத்தில் போட்டியிட வைப்பது என்ற பிரதான தீர்மானத்தை கிழக்கு தமிழர் ஒன்றியம் எடுத்திருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர். 
No comments

Powered by Blogger.