ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை, அனுமதியின்றி மற்றவர்கள் பதிவிட முடியாது! முகநூல் அதிரடி..

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஓன்றான முகநூலினை, கருத்துகளை பகிர்தல், நண்பர்களுடனான உரையாடல், புகைப்படங்களை பகிர்தல் என பல வசதிகள் இருப்பதால் இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி மற்றவர்கள் பதிவிட முடியாது!

பயனாளர்களின் பாதுக்காப்பிற்காக முகநூல் நிறுவனம், பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது முகநூலானது, புகைப்படங்களைப் பதிவிடுதல் தொடர்பாக தெரியப்படுத்தும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.

முகநூல் நிறுவனம் ஒருவரின் புகைப்படத்தை, மற்றொரு நபர் வெளியிட்டால் சம்மந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்தும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி ஒருவரின் முகநூல் முகப்பு புகைப்படங்களையும் (profile picture) மற்றவர்கள் பதியேற்றம் செய்யும் புகைப்படங்களையும் முக அடையாளங்களை கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் அறிய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் முகநூல் பயனாளி ஒருவரின் புகைப்படத்தை, அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ மற்றோரு நபர் பதிவிட்டால், குறிப்பிட்ட அந்த பயனாளிக்கு தெரிவிக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தால் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி மற்றவர்களால் பதிவிடுவதை தவிர்க்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.