மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளரது வீட்டுக்கு தீ வைப்பு


காத்தான்குடி பகுதியில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் ஒருவரின் வீடு, வாகனம் உள்ளிட்ட உடமைகளுக்கு இன்றைய தினம் தீ வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை ஈரான்சிற்றி நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற தேர்தல் தொடர்பான மோதல் சம்பவம் ஒன்றின் காரணமாக இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியல் வேட்பாளருமான முஹம்மது காஸிம் அப்துல் கையூம் என்பவரின் வீடும், வீட்டு உடமைகளும், பட்டா ரக வாகனமுமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

தீ பரவத் தொடங்கியதும் வேட்பாளரும் அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதோடு, இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரைப் பதிவாகிய மிகப்பெரிய தேர்தல் வன்முறைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.