யாழ் மாநகர சபைக்கான ததேகூவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!!


யாழ் மாநகர சபைக்கான ததேகூவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

´நிரந்தரத் தீர்வு – நிலைத்து நிற்கும் அபிவிருத்தி - செழிப்பான வாழ்க்கை´ என்ற கருதுகோளுடன் ´சுத்தமான பசுமை மாநகரை நோக்கி´ எனும் தொனிப் பொருளில், யாழ் மாநகர சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று மாலை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. 

இத் தேர்தல் விஞ்ஞாபனத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா வெளியிட்டு வைக்க கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பெற்றுக் கொண்டார். 

இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான, ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ஜெயசேகரம், பா.கஜதீபன், ஆ.பரஞ்சோதி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

சுத்தமான பசுமை மாநகரம் யாழ் மாநகரம் எனக் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட இத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அழிக்கப்பட்ட மாநகர சபைக் கட்டிடத்தை மீண்டும் அதே இடத்தில் புதுப் பொலிவுடன் அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைத்தல், சாத்தியமான வழிமுறைகளின் கீழ் மாநகரம் முழுவதிற்கும் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், நிலத்தடி நீர் மாசடைவதைத் தடுக்கும் வகையில் மலக்கழிவு அகற்றலுக்கான பாதாள சாக்கடைத் திட்டம், மாநகர திண்மக் கழிவகற்றல் முறைமை நவீன பொறிமுறையில் வினைத்திறனுடன் செயற்பட்டு நகரம் சுத்தமாகப் போணப்படும், மாநகருக்கு நவீன தொழில்நுட்ப முறைமையில் வடிகால் அமைப்பு, மாநகர எல்லையினுள் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கான உடனடித் தீர்வு, முன்னைய நிர்வாகங்களில இடம்பெற்ற முறைகேடுகள் ஊழல் மோசடிகளுக்கு உடனடி விசாரணை உள்ளிட்ட பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன

No comments

Powered by Blogger.