வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட நால்வர் படுகாயம்!!

குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.


தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியில் கொக்கரல்ல என்ற இடத்தில் வேன் ஒன்று மரமொன்றுடன் மோதியதில் வாகனச் சாரதி உட்பட வேனில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று திரும்பும் வழியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்தில் காயமடைந்தவர்கள் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். 

சாரதிக்கு தூக்க மயக்கம் ஏற்பட்டதால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.


சாரதி உட்பட காயமடைந்த நால்வரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் பெண்களாவர். கொக்கரல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.