பிணைமுறி விவாதம்: கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று!!


Image result for sri lanka parliament
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோக மோசடி தொடர்பிலான அறிக்கை குறித்து விவாதிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

இது தொடர்பான கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது கட்சித் தலைவர்களுக்கு மத்திய வங்கியின் அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

குறித்த அறிக்கை கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தால், நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மத்திய வங்கியின் அறிக்கையை விவாதிப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. அத்துடன், நாளைய தினம் நாடாளுமன்றமும் கூடவுள்ளது.

இதன்போது பிணைமுறி அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படுத்தப்பட உள்ளதாகவும் அறியமுடிகின்றது. 

No comments

Powered by Blogger.