கரடியனாறு- புளுட்டுமானோடையில் யானை தாக்கி ஒருவர் பலி!

வந்தாறுமூலை, பிரதான வீதியை சேர்ந்த முத்துலிங்கம் சுந்தரலிங்கம் (52) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

03/01 /2018 அன்று தனது மாட்டுப் பட்டியடியுள்ள புளுட்டுமானோடைக்கு சென்ற இவர், நேற்று காலை தனது மாடுகள் சிலவற்றை காணவில்லையென்று, இன்னும் இருவரை சேர்த்துக்கொண்டு தேடுதலுக்காக சென்றவேளையில், எதிரே யானையொன்று வருவதைக் கண்டு ஓடியபோது, இவரை பிடித்துக் கொண்ட யானை தலையில் ஏறி மிதித்ததால் மூளை சிதறிய நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமானார்.

கரடியனாறு பொலிஸாருடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை செங்கலடி பிரதேசவைத்தியசாலைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனையின் பின்னர், அவரது மனைவியிடம் பிரேதம் ஒப்படைக்கப்பட்டது.No comments

Powered by Blogger.