சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் ஐ.தே.கட்சியின் எம்.பி


ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளா அல்லது 5 ஆண்டுகளாக என்று உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோருமாறு ஜனாதிபதிக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஆலோசனை வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் சில ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தை அமைக்க இணைந்துக்கொள்வதாக ஜனாதிபதி செயலகத்திற்கும் அறிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகள், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு வீழ்ச்சியடைய காரணமாகியுள்ளது எனவும் இது குறித்து கட்சியின் தலைமைத்துவத்திற்கு அறிவிக்க உள்ளதாகவும் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.