ஏவுகணை தாக்குதல்: ஹவாய் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கிய அந்த ஒரு பொய்யான குறுஞ்செய்தி

தவறாக பரவிய ஒரு குறுஞ்செய்தி ஹவாய் மக்கள் அனைவரையும் பீதி அடைய வைத்துவிட்டது.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை ஹவாய் மக்களுக்கு கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. "பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை ஹவாய் எதிர்நோக்கி உள்ளது. அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்." என்ற பொருளில் அந்த செய்தி இருந்தது.

இந்த செய்தியை பார்த்த மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

ஆனால் சிறிது நேரத்தில் அது பொய்யான தகவல் என்று உறுதியானது.

பொய் தகவல்

மாகாண ஆளுநர் டேவிட் , ஊழியர்கள் தவறான பொத்தானை அழுத்தியதால் இந்த அவசர செய்தி பரவியாதாக கூறி, மக்களிடம் மன்னிப்பு கோரினார்.

அமெரிக்கா அரசாங்கம் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கூறி உள்ளது.

அணு ஆயுத தாக்குதல்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பனிப்போருக்கு பிறகு, முதன்முறையாக அமெரிக்காவின் ஹவாயில், அணுஆயுத தாக்குதல் ஏற்பட்டால் மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் ஒலியின் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ராணுவத்தின் ஆசிய-பசிபிக் பகுதிக்கான தலைமையிடமாக ஹவாய் உள்ளது.

No comments

Powered by Blogger.