விஷேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் பலி!

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப் பொருள் வர்த்தகருமான டீ. மஞ்சு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். 

வத்தளை, ஹேகித்த பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரழந்துள்ளார். 

இன்று பகல் 01.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி வத்தளை, ஹேகித்த பிரதேசத்தில் சந்தேகத்திற்குறிய வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட போது வாகனத்தில் இருந்து விஷேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

உயிரிழந்தவர் போதைப் பொருள் வர்த்தகரான தடல்லகே மஞ்சு என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த வேனில் இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Gator Website Builder