கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை மட்டக்களப்பில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாபெரும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

குறித்த கூட்டம் மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் நாளை மாலை நடைபெறவுள்ளது.

அத்துடன், வவுணதீவு மற்றும் வாழைச்சேனையிலும் கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments

Powered by Blogger.