அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த ​வேண்டாமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில், சகல அரசியல் மற்றும் சுயேட்சை கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளில் சிறுவர் ஈடுபடுத்தப்படுகின்றமைத் ​தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தேசிய சிறுவர் பாதுகாப்பு சபைக்கு முறைபாடு கிடைத்துள்ளதாக சபை அறிவித்துள்ளது.

சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் ஊடாக அவர்கள் மனரீதியாக அல்லது உடலரீதியாக பாதிக்கப்படுகின்றமையானது அது சிறுவர் துஷ்பிரயோகமெனவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் 1929 என்ற அலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் தருமாரும் அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.