முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம்! ஆபத்தான கட்டத்தில் 10 இலட்சம் இலங்கையர்கள்

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் பல இலட்சம் பேருக்கு ஆபத்தாக முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைப்பாடு காரணமாக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் தொழில் புரியும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கக் கூடும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த நிலைமை காரணமாக இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வருவதால், கிடைத்து வரும் 50 ஆயிரம் கோடி ரூபா அந்நிய செலாவணியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் தொழில் புரியும் நோக்கில் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. இவர்களில் அதிகளவானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் மூன்று லட்சம் பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர்.

10 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளில் தொழில் புரிந்து வருகின்றனர். எனினும் இலங்கையில் இலங்கையில் முஸ்லிம் மக்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 67 ஆயிரத்து 523 என்பது குறிப்பிடத்தக்கது.

Gator Website Builder