45 வருடங்களாக தவிசாளர் பதவிக்காக காத்திருக்கும் களுதாவளை மக்கள்


45 வருடங்களாக தவிசாளர் பதவிக்காக காத்திருக்கும் களுதாவளை மக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

களுதாவளை கிராமம் இல்லை நகரம் என்று அரசாங்க அதிபர் அண்மையில் களுதாவளை மகா வித்தியாலய விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது கூறியிருந்தார்.

கல்வி, விவசாயம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் மிகப் பிரபலமான இந்த களுதாவளை கிராமத்திற்கு அரசியல் தலைவர் உருவாவதில் தான் பல சிக்கல்கள் நிலவுகின்றன.

இதற்கு காரணம் அந்தக் கிராமம் அதிகமான வாக்காளர்களை கொண்டிருப்பதால் எல்லா அரசியல் வாதிகளுக்கும் இக்கிராமத்தில் கண்வைத்துச் செயற்படுகின்றார்கள்.

இந்த நிலையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கிராமத்திலுள்ள 2 வட்டாரங்களிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இது இவ்வாறு இருக்க மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு இக்கிராமத்தைச் சேர்ந்தவர் தவிசாளர் பதவியை பெறுவதென்பது உறுதியான நிலையில் இதனை தடுப்பதற்கு ஒரு சில கிராமத்தவர்கள் செயற்படுவது கவலையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.