மலேசியாவிலுள்ள சபா மாநிலத்தில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!


சபா மாநிலத்திலுள்ள ரனாவில், நேற்று வியாழக்கிழமை (08.03.2018) இரவு 9.06 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையொன்றில், 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அறிவித்துள்ளது.

இந் நிலநடுக்கம், கோத்தா கினாபாலு, பெனாம்பாங், துவாரான் மற்றும் பாபார் உள்ளிட்ட பல மாவட்டங்களில், ஐந்து முதல் ஏழு வினாடிகள் வரை, நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும், தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


மேலும், சபா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் இந்நிலநடுக்கத்தின் காரணமாக, தங்கும் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.