மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


9 960 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் A சித்தி - அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதல் இடத்திற்கு தெரிவு


வெளியான 2017 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தரதர சாதாரண தரப் பரீட்சையில் முடிவுகளுக்கமைவாக ஒன்பது ஆயிரத்து 960 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திபெற்றுள்ளார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை எண்ணாயிரத்து 24 ஆக காணப்பட்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கணித பாடத்தில் சித்தியடைந்தோரின் எண்ணிக்கை இம்முறை 4 சதவீதத்தால் அதிகரித்திதுள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 67 சதவீதமானோர் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளார். உயர்தரத்தை கற்பதற்கு கூடுதலான மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது உயர்தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 73 சதவீதத்தை தாண்டுகிறது.

No comments

Powered by Blogger.