மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


தேற்றாத்தீவில் வான் விபத்து !!

                                                                                            -செ.துஜியந்தன் -
தேற்றாத்தீவு பிரதான வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வான் ஒன்று வீடொன்றை இடித்து தள்ளி உள்நுழைந்துள்ளது. இதனால் வீடு சேதமடைந்துள்ளது. 

இன்று மதியம் 12 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து இருவரோடு காத்தான்குடி நோக்கிப் பயணித்த சிறிய ரக வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்ததின் காரணமாக வீடொன்றை இடித்து தள்ளியுள்ளது. 

வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த க.சுந்தரலிங்கம்(58வயது) என்பவர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.No comments

Powered by Blogger.