யாழில் இரவு நேர ரோந்தில் இராணுவம்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமை காரணமாக யாழ். குடாநாட்டில் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களாக கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து நாட்டின் ஏனைய பகுதியிலுள்ள மக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் இரவு நேரத்தில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி மற்றும் இதர பிரதேசங்கள் பலவற்றில் அசாதாரண சூழல் நிலவுகின்ற நிலையில், நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.