உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியிட தொடர்ந்தும் தாமதம்


உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிட இன்னும் சில தினங்கள் செல்லும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. 

குறிப்பிட்ட உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அச்சிடும் பணிகள் இடம்பெறுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்கள தலைவி கங்கானி லியனகே தெரிவித்தார். 

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,689 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். 

உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதை மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு பிற்போட்டிருப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தப்பா ஊடகவியலாளர் சந்திப்பொன்றி கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.