தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி இருவர் பலி

தம்புள்ளை - பன்னம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வெளிநாடுகளுக்கு பலசரக்குகளை ஏற்றுமைதி செய்யும் தொழிற்சாலையில் விஷ வாயு ஒன்றை சுவாசித்தன் காரணமாக அங்கு தொழில் புரிந்து வந்த இரண்டு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை - பன்னம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான மதுஷான் ஜயவர்தன என்ற இளைஞனும், தம்புள்ளை - எம்புல்அம்பே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான எச்.எம்.ஜீ. நிரோஷா தில்ருக்ஸி என்ற ஒரு பிள்ளையின் தாயுமே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

தொழிற்சாலையில் உள்நாட்டு பலசரக்குகள் அரைக்கப்பட்டு அவற்றை பொதி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரவு நேரத்தில் பலசரக்குகள் அரைக்கப்பட்டு பொதி செய்யப்படும். நேற்றிரவு 9.30 அளவில் சேர என்ற கிழங்கு வகையை அரைத்துக்கொண்டிருந்த இந்த ஊழியர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.

இவர்கள் இரவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அனுமதிக்கப்படும் போதே அவர்கள் இறந்து காணப்பட்டதாக தம்புள்ளை வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலை முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன், பொலிஸ் காவலும் போடப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான சரியான காரணத்தை அறிய தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இறந்தவர்களின் சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறுகிறது.

No comments

Powered by Blogger.