வாகன அனுமதி பத்திர கட்டணம் அதிகரிப்பு


வாகன பதிவின் போது அறிவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அறிமுகம் செய்த காபன் வரி நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
வாகனங்களுக்கு வருடாந்தம் வருமான அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு வாகன திறனை (வருட எண்ணிக்கை) கருத்திற் கொண்டு இந்த வரி அறவிடப்படுகின்றது.

அதற்கமைய C-C-100 என்ஜின் திறனுக்கு குறைவான 5 வருடங்களுக்கு குறைவான காலம் பயன்படுத்தப்பட்ட, பெட்ரோல் மற்றும் டீசல் வானங்களின் C-C-1க்கு 50 சதம் என்ற கணக்கில் வரி அறவிடப்படும்.

5 - 10 வருடங்கள் பழைமையான வாகனங்களில் C.C 1க்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் அறவிடப்படும்.

10 வருடங்களை விடவும் பழைமையான வாகனங்களில் C.C 1 1.50 ரூபாய் வரியாக அறவிடப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகள் பேருந்துகள் பயணித்த காலம் 5 வருடங்களுக்கும் குறைவு என்றால் ஒரு வண்டிக்கு 1000 ரூபாயும், 10 வருடம் பயணித்த வண்டிக்கு 2000 ரூபாயும், 10 வருடங்களுக்கு அதிக காலம் பயணித்த வண்டிக்கு 3000 ரூபாயும் வருமான அனுமதி கட்டணமாக அறவிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
Gator Website Builder