யாழ்ப்பாணம் வந்த எங்க வீட்டு மாப்பிள்ளை!!!

இந்திய திரைப்பட நடிகர் ஆர்யா யாழ்ப்பாணம் வந்திருந்ததும், அவ்வேளை சில இடங்களில் அவரை பொது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் சூழ்ந்து கொண்டதும், அவர் ஜூம்மா தொழுகைக்காக பள்ளிவாசல் சென்றதும், செல்பி எடுத்ததும் பழைய செய்தி.

பின்னர் இன்று வரலாற்றுப் புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகத்தில் இடம்பெற்ற அத்துமீறிய படப்பிடிப்பும், ஏன் அந்த படப்பிடிப்பு என்பதும், யாருக்காக இங்கு வந்தார் என்பதும்தான் இந்த செய்தி.

ஆர்யா யாழ்ப்பாணத்து பெண்ணையும், அவரது சொந்தங்களையும், அவர் வாழ்ந்த வீட்டையும், அவரின் கடந்த கால வாழ்க்கையையும் எடை போடத்தான் இங்கே வந்தார்.

ஆனால், இதுவெல்லாம் வெறும் கேலிக் கூத்து என்றும் ஏற்கனவே திருமணமாகி ஒரு பிள்ளைக்கும் தாயான சுஷானாவிடம் என்னத்தை ஆர்யா புதிதாக காணுவார் என்பது வாசகர்களாகிய நீங்கள் குறுகுறுப்பது இந்த செய்தியை சிரித்துக் கொண்டே எழுதிக் கொண்டிருக்கும் எனக்கும் தெரியும்.

ஆனால் உண்மையை சொல்கிறேன், TRP ஐ அதிகரிப்பதற்கும், நிகழ்ச்சியை விறுவிறுவென கொண்டு செல்வதற்கும், ஈழம், அதுவும் ஒரு யாழ்ப்பாண பெண்ணை ஆர்யா திருமணம் செய்வாரா என இறுதிவரை ரசிகர்களை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதும், நிகழ்ச்சி தயாரிப்பாளரின் திட்டம்.


யார் இந்த ஆர்யா? ஏற்கனவே திருமணமானவர்?

ஆர்யா 2003ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர், இந்த திரைப்படத்தில் சாம், அசின், பூஜா, லைலா நடித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டு கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இப்படி படிப்படியாக வளர்ந்து முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க தொடங்கினார்.

யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி!!!

ஆர்யா ஏற்கனவே திருமணமானவர், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவரே இதை கூறியிருந்தார். அந்த எபிசோட்டை பார்க்காதவர்களுக்கும் இது தெரியாது.

திரைவாழ்வுக்கு வரும் முன்னர் ஆர்யா பெண்ணொருவரை 7 வருடமாக காதலித்துள்ளார்.

பின்னர் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

ஆர்யாவின் கலாச்சார முறைப்படி ஒரு முறை பதிவு திருமணம் செய்து கொண்டாலும், இரண்டாவது முறையும் கையெழுத்திட்டு பதிவுத் திருமணம் செய்ய வேண்டும்.

இரண்டாவது கையொப்பமிடும் காலப்பகுதிக்குள் ஆர்யாவிற்கு நிரந்தர தொழில் எதுவும் இல்லை. பாஸ்கரன் என்கிற பாஸ்கரன் போல வெட்டியாகவே வலம் வந்துள்ளார்.

இந்த விடயம் பெண் வீட்டாருக்கு தெரியவர நிலைமை விபரீதம் ஆனது. பெண் வீட்டார் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, காதலியும் (மனைவி) தந்திரமாக விலகிக் கொண்டார்.

இந்த விடயம் தனது வாழ்க்கையில் இடம்பெற்ற கடினமான நேரம் என இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

இது நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும், ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.


சரி விடயத்திற்கு வருவோம்.

ஆர்யாவை மையமாக வைத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு வரலாற்று சிறப்புமி்க யாழ் நூலகத்தில் தடையை மீறி நடந்ததாக இன்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது தொடர்புபட்ட செய்தி இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தனக்கு ஜோடி தேடி வருகிறார்.

ஆர்யாவை கரம்பிடிக்கும் ஆசையில், 16 பெண்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அதில் தனக்கு சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க மாட்டார் என்று தோன்றும் பெண்களை, ஆர்யா ஒவ்வொரு வாரமும் வெளியேற்றி வருகிறார்.

இப்போது வரை ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் 7 பெண்களை இதுவரை வெளியேறி உள்ளார்.

மீதமுள்ள பெண்கள் ஆர்யாவை கரம்பிடிக்கும் ஆசையில் தினமும் பல்வேறு போட்டிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், இந்நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது வெறும் 4 போட்டியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் உள்ளனர்.

4 பெண்களின் வீடுகளுக்கும் சென்று நடிகர் ஆர்யா அவர்கள் குடும்பத்துடன் பழகி வருகிறார்.

யாழ்ப்பாண வருகையும், சலசலப்பும்!

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்குபற்றும் சுசானா .

அந்த நான்கு போட்டியாளர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த சுசானாவின் வீட்டிற்கே ஆர்யா தற்பொழுது வந்துள்ளார்.

சுசானா தற்பொழுது கனடாவில் செட்டில் ஆகிவிட்டாலும், அவரின் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆர்யா யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு யாழ்ப்பாணத்தில் இருக்கும் நூலகத்தில் நிகழ்ச்சி குழுவினர் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

அப்போது, அவர்கள் முறையான அனுமதி இல்லாமல் நூலகத்திற்குள் படப்பிடிப்பு நடத்தியதாக புகாரும் எழுந்துள்ளது.

ஏற்கனவே, சுசானாவுக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இலங்கையில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ படப்பிடிப்பால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.விமர்சனமும், விதண்டாவாதங்களும், கடுப்பும்!

TRP க்காக பெண்களை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் ஆர்யா

நிகழ்ச்சியில் ஆர்யா போட்டியாளர்களுக்கு முத்தம் கொடுப்பது, தோளில் கையை போடுவது எல்லாம் நல்லாவா இருக்கு? ஆர்யாவை மரியாதை இல்லாமல் போடா, வாடான்னு பேசுவது, ஏதோ அவர் தனக்கே சொந்தமானவர் போன்று சில பெண்கள் சீன் போடுவதும் என நிகழ்ச்சி கடுப்பாக உள்ளது.

அதிலும், ஆர்யாவை அபர்னதி என்ற போட்டியாளர் கட்டிப்பிடித்து, தோள் மீது கையை போட்டு, முத்தம் கொடுத்தார்.

மேலும், ஆர்யாவின் நண்பர்களான ஷாம், பரத் வேறு அபர்னதியை பிடித்திருப்பதாக ஏத்திவிடுகிறார்கள். இதுவும் மற்ற போட்டியாளர்களுக்கும், சில பார்வையாளர்களுக்கு உச்சகட்ட கடுப்பை ஏற்படுத்திய சில விடயங்கள்.

நடக்குமா இந்த திருமணம்?

தமிழர்களான நமக்குத்தான் இது போன்ற ரியாலிட்டி ஷோ புதுசு. ஆனால், இது 2002 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தி பேச்சிலர் எனும் ரியாலிட்டி ஷோவின் தமிழ் வெர்சன் தான் இது என்கிறார்கள். இந்தியாவில் இந்தக் காற்று பாலிவுட்டைத் தாண்டித்தான் தமிழகம் வந்திருக்கிறது.

2013 ஆம் ஆண்டில் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் இதே மாதிரியான ரியாலிட்டி ஷோ ஒன்றில் தனத் வாழ்க்கைத் துணையைத் தேடிக் கண்டடையப் போவதாகக் கூறி பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடித்தார்.

The Bachelorette – Mere Khayalonki Malika நிகழ்ச்சி மூலமாக அவருக்குப் பொருத்தமான மனதுக்குப் பிடித்த ஒரு வரனும் அமைந்தது வாஸ்தவமே. ஆனால், ஏனோ இறுதியில்
தான் கண்டடைந்த அந்த நபரை மல்லிகா திருமணம் செய்து கொள்ளவில்லை.

இருவரும் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்து விட்டார்கள் என்று தகவல்.

ஆர்யா விஷயம் எப்படியென்று போட்டி முடிவுக்கு வரும்போது தான் தெரியும். ஆனால் மாருதம்நியூஸின் கணிப்பின் படி ஆர்யா எந்தவொரு போட்டியாளரையும் திருமணம் செய்து கொள்ளமாட்டார் என்பதுதான் எங்களது ஆரூடம்.

No comments

Powered by Blogger.