இன்று திரைக்குவரும் "இதுகாலம்" ஈழத் தமிழ் திரைப்படம்!!

இலங்கை தேசத்தின் புலம் பெயர் கலைஞரின் இது காலம்    ஈழத்தமிழ் சினிமாவில் முதன் முதலாக புதிய புரட்சியையும் பல கலைஞர்களுக்கு களமமைத்த உன்னத படைப்பாக இன்றைய வாழ்வியல் நிலமைகளையும் மிகத் துல்லியமாக புடம் போட்டு காண்பிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த திரைப்படம் இயக்குனர் திரு குணபதி (பாபாஜி)  அவர்களின் தயாாரிப்பு இயக்கத்தில் இலங்கை புலம் பெயர் தேசத்து நடிகர்கள் இசையமைப்பாளர் பாடலாசிரியர் என பன்முக திறமைகளின் வெளிப்பாடாக இந்திய தேசத்தின் தமிழ் சினிமா கைகட்டி நிற்குமளவுக்கு பிரமாண்டமாகவும் பலகோடி செலவில் தயாராகி இன்று இலங்கை முழுவதுவும் பதினைந்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காட்சிப் படுத்தப்படவுள்ளது.

அண்மையில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோமாளி கிங்ஸ் திரைப்படத்தோடு இந்த திரைப்படத்தை ஒப்பிட முடியாது அதை விட பல கோணங்களில் பன்முகப்படுத்திய அனுபவம்மிக்க தயாரிப்பு ஒளிப்பதிவு இசை ஒலியமைப்பு என விரிவடைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.

இங்கே ஊடகங்களும் தமிழ் மக்களும் இந்திய சினிமாவிற்கு வழங்கும் ஆதரவினை விட எம்மரின் உயர்ந்த படைப்பான "இது காலம்" திரைப்படத்துக்கு வழங்கி எதிர்வரும் காலங்களில் ஈழத்து தமிழ் சினிமாவிற்கும் திரைப்பட கலைஞர்களுக்கும் ஒரு களமமைத்து உந்து சக்தியாக செயற்பட வேண்டுமென்பது மாருதத்தின் கோரிக்கை.

No comments

Powered by Blogger.