பெண்ணுக்கு பாலியல் சேட்டை விடுத்த மூவர் விளக்கமறியல்!!

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில், வீதியல் சென்ற பெண் ஒருவரை மதுபோதையில் பாலியல் சேட்டை விடுத்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா இன்று (23) உத்தரவிட்டார். 

கல்லடி பீச் வீதியில் துவிச்சக்கரவண்டியில் சம்பவதினமான நேற்று மாலை சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மதுபோதையில் இருந்த 3 இளைஞர்கள் பாலியல் சேட்டை விடுத்துள்ளனர். இதனையடுத்த குறித்த பெண் சத்தமிட்டு கத்தியதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இளைஞர்களை மடக்கிபிடித்து நைப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். 

காத்தான்குடி, றிஸ்வி நகர், பூநொச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20, 23 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Gator Website Builder