இலங்கையின் முதலாவது உள்நாட்டு விமான சேவை மட்டக்களப்பில் நாளை ஆரம்பமாகின்றது

இலங்கையின் முதலாவது உள்நாட்டு விமான சேவை மட்டக்களப்பில் நாளை ஆரம்பமாகின்றது.

போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மட்டக்களப்பு விமான நிலையத்தை திறந்து வைத்து முதலாவது விமான சேவையை மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து இச்சேவை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

1488 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட ஓடு பாதையைக் கொண்ட மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையம் இலங்கையில் திறக்கப்படும் நான்காவது விமான நிலையமாகும்.

கட்டுநாயக்கா மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுடன் இரத்மலான விமான நிலையமும் இதற்கு முன்னர் இலங்கையில் செயற்பட்டு வருகின்றது.

இவ்விமான நிலையத்தினூடாக கொழும்புக்கான விமான சேவைகள் தினமும் இடம்பெறுமென மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் சிந்தக பொன்சேகா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.