தீவிரமடையும் சமூக வலைத்தளங்கள் மீதான தடை! இலங்கை வரும் பேஸ்புக் நிறுவன தலைவர்கள்

பேஸ்புக் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இனவாதம், மதவாதம் மற்றும் கோபத்தை பரப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து பதிவுகளையும் பேஸ்புக் நிறுவனத்தினால் நீக்குவதற்காக பேஸ்புக் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் இந்த முறையில் பதிவுகளை தானாகவே நீக்கும் முறையை செயற்படுத்துவதற்கு உதவுவதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கள மொழியில் உள்ள பதிவுகளை நீக்குவதற்காக எடுத்து கொள்ளப்பட்ட காலம் அதிகமாக கடந்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் பேஸ்புக் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் வருத்தம் வெளியிட்டுள்ளது.

ஏனைய வளர்ச்சியடைந்துள்ள நாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ள வசதிகளை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் பேஸ்புக் நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சிறப்பான பதில் ஒன்றே கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.