பட்டப்பகலில் கொல்லப்பட்ட அஸ்வினி! கொன்றது கணவரா? வெளியான திடுக்கிடும் தகவல்கள்


சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஒருதலைக் காதலால் கொல்லப்பட்ட சுவாதி பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம், இன்று அதேபாணியில் கொலை செய்யப்பட்டுள்ளார் கல்லூரி மாணவி அஸ்வினி.

யார் இந்த அழகேசன்?

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி, அழகேசனும் அதே பகுதியை சேர்ந்தவர் தான், முகப்பேரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.

அஸ்வினிக்கு தந்தை இல்லை, தாய் மற்றும் உறவினர்கள் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், நண்பர்களாக பழகிய பின்னர் காதல் மலர்ந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சாதியை காரணம் காட்டி அஸ்வினியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தன் சொத்தை விற்று அஸ்வினியை அழகேசன் படிக்கவைத்துள்ளார், அடிக்கடி கல்லூரிக்கு அழைத்து சென்று இருவரும் காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒருநாள் வீட்டுக்கே சென்று அஸ்வினி கழுத்தில் அழகேசன் தாலி கட்டியுள்ளார்.

இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டதால் அதிர்ச்சியடைந்த அஸ்வினியின் தாய் மதுரவாயல் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியதுடன், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, அழகேசனை எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இதனைதொடர்ந்து அஸ்வினியின் பெற்றோர், அவரை ஜாபர்கான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்து படிக்கவைத்துள்ளனர்.


இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த அழகேசன், குடும்பத்தினரிடம் புலம்பிவந்துள்ளார், அஸ்வினை மறக்க முடியாமல் தவிப்பதாகவும், வேறொரு நபருடன் திருமணம் நடந்தால் அவளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று கல்லூரிக்கு சென்ற அழகேசன், வெளியே வந்த அஸ்வினியை சரமாரியாக தாக்கி கொன்றுள்ளார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அழகேசனை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர், கொலை செய்த ஆயுதத்தை கைப்பற்றிய பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அஸ்வினியின் உடல் பிரேதபரிசோதனை நடப்பதற்கான வேலைகள் நடந்துவருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.