நாமல் அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டதன் காரணம் வெளியானது!

கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றியவர்களின் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அமெரிக்காவுக்குள் நுளைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ச மாத்திரமல்லாது அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்சவிற்கு பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவான மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் அனைத்து விடயங்களுக்கு பதிலளிப்பதில்லை எனவும் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிவர்களின் பட்டியலில் நாமல் ராஜபக்சவின் பெயர் இருப்பதாக தகவல்கள் கூறுவதாகவும் இந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மேலும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் மோசடிகளை விசாரிக்க இலங்கை அரசாங்கம் நீதிமன்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.