கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்

கண்டி - திகன பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் டயர் எரிப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகளை திசைதிருப்பி நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த சில குழுக்கள் முயல்வதாக மட்டக்களப்பு ,அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களில் இருந்தும் எமது பிரதிநிதிகள் எம்மை தொடர்பு கொண்டு முறையிட்டனர் என இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்து சம்மேளனத்தின் சார்பில் இது தொடர்பாக பிரிகேடியர் அவர்களுடனும் பொலிஸ் திணைக்களத்துடனும் ஜனாதிபதி காரியாலய இணைப்பதிகாரியுடன் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பாதுகாப்பு படையினரையும் பொலிஸாரையும் அனுப்பி கடந்த இரண்டு தினங்களாக பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் பிரதான பாதைகளில் மட்டுமே பாதுகாப்பு படைகளும் பொலிஸாரும் பாதுகாப்பை வழங்கி வருவதாகவும் எனினும் உட்புற பாதைகள் கிராமங்களில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் எமது அமைப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.

அதனைத் தொடர்ந்து உட்புறக் கிராமங்கள் பாதைகளிலும் சந்திகளிலும் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யுமாறு வேண்டியிருந்தேன்.

அதன்படி ரோந்து பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. எமது வழிகாட்டலில் இளைஞர்கள் மிகவும் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொண்டுள்ளனர்.

இந்து சம்மேளனத்தின் சார்பில் பொலிஸ் மா அதிபர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜனாதிபதி பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு இந்து சம்மேளனத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்து கொள்வதுடன், எதிர்வரும் நாட்களிலும் மிகவும் எச்சரிக்கையாக செயற்படுமாறும் எமது மக்களை நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Gator Website Builder