யாழ்.மாநகர சபைக்கான விகி­தா­சா­ர உறுப்பினர்கள் விவரம் வெளியாகியது!

சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்­சி­கள் அனைத்­து கட்சிகளும் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­கான விகி­தா­சா­ரப் பட்­டி­யல் உறுப்­பி­னர்­க­ளின் பெயர் விவ­ரங்­களை தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் கைய­ளித்­துள்­ளன.

கடந்த மாசி மாதம் 10 ஆம் திகதி இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­ச­பைக்­கான 27 வட்­டா­ரங்­க­ளுக்­கான உறுப்­பி­னர்­கள் நேர­டி­யா­கத் தேர்வு செய்­யப்­பட்­டி­ருந்­த­னர்.

விகி­தா­சார உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­க­ளைத் தற்­போது கட்­சி­கள் பரிந்­து­ரைத்­துள்­ளன.

இதில் இலங்கை தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் ந.லோக­த­யா­ளன் மற்­றும் பெண் உறுப்­பி­ன­ரான பி.நளினா ஆகி­யோ­ரின் பெயர்­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதே­போன்று ஈ.பி.டி.பி கட்­சி­யின் சார்­பில் ப.யோகேஸ்­வரி , ச.அனு­சியா , நா.ஜெயந்­தினி , மு.றெமீ­டி­யஸ் , கு.செல்­வ­வ­டி­வேல் , கா.வேலும்­ம­யி­லும் ( ஜெகன் ) , கி.டேனி­யன் , து.இளங்கோ ( றீகன்) ஆகி­யோர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் சி.குலேந்­திர்­ராசா , வி.விஜ­ய­தர்­சினி ஆகி­யோ­ரின் பெயர்­க­ளும் சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளன.

அகில இலங்கை தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யின் சார்­பில் வி.மணி­வண்­ணன் , த.அஜந்தா , சி.சுகந்­தினி , தி.சுபா­சினி ஆகி­யோ­ரின் பெயர்­க­ளும் சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளன.

No comments

Powered by Blogger.