இலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவல்!

இலங்கை ரூபாயின் பெறுமதி தற்போது பாரிய வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய எஞ்ஜின் திறன் குறைவான வாகனத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

எஞ்ஜின் திறன் அதிகமான வாகனங்களின் விலை ஒன்றரை அல்லது இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வெகன்ஆர் வாகனம் ஒன்று ஒரு இலட்சம் ரூபாயிலும், டொயோட்டா விட்ஸ் வாகனம் இரண்டு இலட்சம் ரூபாயிலும் அதிகரிக்கப்பட்ட பெறுமதியுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.

கடந்த நாட்களில் காணப்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்ததோடு, அதன் தாக்கம் காரணமாக வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.