மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


துபாய் நாட்டு இளவரசி கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தப்பியோட்டம் : காரணம் இதுவா?

துபாய் நாட்டு இளவரசி இந்தியாவிற்கு கடல் வழியாக படகில் தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும், துபாய் நாட்டின் இளவரசியுமான சேகா லத்தீபா மலை ஏறுவது, குதிரையேற்றம், செயற்கை இறக்கையை கட்டிக்கொண்டு வானில் பறப்பது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வமுடையவர்.

ஆனாலும் பிரதமர் சேக் முகமது தனது மகளை கட்டுப்படுத்தி வீட்டுக்காவலில் வைத்துள்ளார்.

சுதந்திரமாய் வாழ விரும்பிய சேகாவிற்கு இது பிடிக்கவில்லை. எனவே துபாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அவர் முடிவு செய்து, இந்தியாவை தேர்வு செய்து இளவரசி சேகா கடந்த 4ஆம் திகதி தனது நண்பர் ஒருவருடன் ஒரு படகில் ஏறி கடல் வழியாக இந்திய கடல் பகுதியில் நுழைந்துள்ளார்.

இதை மோப்பம் பிடித்த இந்திய கடலோரக் காவல்படை சேகாவை கோவா அருகே மடக்கிப் பிடித்து, சேகாவையும் அவரது நண்பரையும் ஐக்கிய அரபு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடல் வழியாக வந்த சேகாவை மர்ம நபர்கள் 4 பேர் கடத்தி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.