முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மீண்டும் 02 மாத கால அவகாசம்!!

பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது நேற்று (20) முதல் கட்டாய நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதற்காக 02 மாத கால சலுகை வழங்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார். 

நேற்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். 

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவதை ஊக்கப்படுத்துவதற்கே இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். 

அதேநேரம் பயணிகளுக்கு அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட பற்றுச்சீட்டு வழங்குவதன் மூலம் அவர்கள் திருப்தியடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும் இந்த தீர்மானத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் கொழும்புக்கு வௌிப்பிரதேசங்களில் உள்ள முச்சக்ககர வண்டி சாரதிகளும் கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவதற்கு வசதியாக மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்குவதாக அவர் சிசிர கோதாகொட கூறினார்.

No comments

Powered by Blogger.