ரணிலுக்கு எதிராக 116? இறுக்கமடையும் சூழல்


நம்பிக்கையில்லாப் பிரேரணை நிச்சயம் வெற்றி பெறும் எனவும் அவர் கூறியுள்ளார் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த 116 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிறியி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

இதனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு முன்னர் ராஜினாமா செய்து விடுவார் என எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் கூட ரணில் விக்ரமசிங்கவுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.